உள்ளூர் செய்திகள்

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2023-01-10 08:10 GMT   |   Update On 2023-01-10 08:10 GMT
  • இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.
  • தலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.பெரம்பலூர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 2022-23-ம் நிதியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க 2-வது பெண் குழந்தை பிறந்து 3 ஆண்டுக்குள் இ-சேவை மையத்தில் இத்திட்டத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.புதிதாக விண்ணப்பிக்க இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்ய, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, தந்தையின் கல்வி மாற்று சான்று, தாயாரின் கல்வி மாற்று சான்று, 40 வயதுக்குள் குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை சான்று, ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றின் நகல்கள் மற்றும் குடும்பப் புகைப்படம், குழந்தைகளின் பிறப்பு சான்றுகள் அசல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யவும்.இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே வைப்பு தொகை ரசீது பெற்று 18 வயது முதிர்வடைந்த அனைத்து பயனாளிகளும் முதிர்வு தொகை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே 2001-04 வரை பதிவு செய்து வைப்புத்தொகை பெற்றுள்ள அனைத்து பயனாளிகளும் கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News