கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பில் பெரம்பலூர் எஸ்.பி.க்கு விருது
- கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பில் பெரம்பலூர் எஸ்.பி.க்கு விருது வழங்கபட்டுள்ளது
- முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் விருது வழங்கி பாராட்டினார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிப்பதில் சிறப்பாக செயல்பட்ட பெரம்பலூர் எஸ்பிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. கொத்தடிமை தொழிலாளர்களை கண்டறிந்து மீட்டு அரசின் வழிகாட்டுதலின்படி அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தும், கொத்தடிமை ஒழிப்பு எப்படி உருவாகிறது என்பதை கண்டறிந்து அவற்றை முற்றிலும் ஒழிக்கும் வகையில் சிறப்பாக திட்டம் தீட்டி நடைமுறைப்படுத்தியும், குழந்தை தொழிலாள முறை உருவாக காரணமும், பாதுகாப்பும், அரவணைப்பும் இல்லாத குந்தைகளை தங்களது பிழைப்பிற்காக வேலையில் ஈடுப்படுத்தப்படும் .குழந்தைகளை மீட்டு அரசு பரிந்துரைத்த இடங்களில் தங்க வைத்தும், சாலை யோரத்தில் பாதுகாப்பின்றி முறையில் தங்கியிருக்கும் வெளி மாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தும் சிறப்பாகவும், தொழிலாளர் முறையை ஒழிப்பதில் சிறப்பாக செயல்பட்ட பெரம்பலூர் எஸ்.பி. ஷியாம்ளா தேவியை பாராட்டி சென்னையில் நடந்த அரசு விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் அதன் முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் விருது வழங்கி பாராட்டினார்.