உள்ளூர் செய்திகள்

அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-09-15 10:00 GMT   |   Update On 2022-09-15 10:00 GMT
  • அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
  • குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு, சில்ரன் சாரிடபுள் டிரஸ்ட் ஆகியவை இணைந்து எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்று நடத்தினர். இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிதம்பரம் தலைமை தாங்கினார். இதில் பள்ளி மாணவ-மாணவிகளிடையே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து, பெண் போலீஸ் சுமா ஆகியோர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம், இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் குழந்தைகள் நல குழு உறுப்பினர் ராமு, நன்னடத்தை அலுவலர் பிரபு, மணிமாலா ஆகியோரும் பேசினர். முன்னதாக ஆசிரியை ராகமஞ்சரி வரவேற்றார். முடிவில் முரளீஸ்வரன் நன்றி கூறினார்."

Tags:    

Similar News