உள்ளூர் செய்திகள் (District)

ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

Published On 2023-03-09 07:41 GMT   |   Update On 2023-03-09 07:41 GMT
  • தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நடைபெற்றது
  • வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

பெரம்பலூர்,

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமம் சார்பில் ஹோலி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து பேசுகையில், ஹோலி பண்டிகையின்போது சாதி, மதம், இனம், மொழி, நிறம், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் சமம் என்ற மகத்துவம் ஓங்கி நிற்பது இந்த விழாவின் சிறப்பாகும். நமது கல்விக்குழுமத்தில் பயிலும் வட மாநில மாணவர்களுடன் இணைந்து நமது மாணவர்கள் சகோதர மனப்பான்மையுடன் இந்த விழாவை கொண்டாடுவது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.இவ்விழாவில் கலர் பொடிகளை தூவி மகிழ்வார்கள். வண்ணங்கள் ஆயிர்வேத மூலிகைகளான வேப்பிலை, குங்குமம், மஞ்சள், வில்வம், போன்றவற்றால் செய்யபடுவதால் மருத்துவ நன்மைகள் கிடைக்கிறது. அதனால் அனைவரும் இயற்கையான வண்ண பொடிகளை கொண்டு ஹோலியை கொண்டாட வேண்டும் என தெரிவித்தார்.ஹோலி பண்டிகையையொட்டி ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கலர் பொடிகளைத் தூவியும் திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விழாவில் 200 மேற்பட்ட வடமாநில மாணவர்கள் மற்றும் முதல்வர்கள், துணை முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News