உள்ளூர் செய்திகள்
பெரம்பலூரில் வன விலங்கு வேட்டையை முற்றிலும் தடுக்க வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணி
- பெரம்பலூரில் வன விலங்கு வேட்டையை முற்றிலும் தடுக்க வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணி மேற்கொண்டனர்
- இந்த ரோந்து பணி தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட வன அலுவலர் குகனேஷ் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உத்தரவின்பேரில் பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிகுமரன் தலைமையில் பெரம்பலூர் வனவர் குமார், வனக்காப்பாளர்கள் அன்பரசு, மணிகண்டன் மற்றும் களப்பணியாளர்கள் கொண்ட குழுவினர் கல்பாடி, சிறுவாச்சூர், சத்திரமனை, வேலூர், மங்கூன், அம்மாபாளையம், குரும்பலூர், லாடபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பன்றி , மான், முயல் உள்ளிட்ட வனவிலங்கு வேட்டை தடுப்பு, இரவு ரோந்து பணி மேற்கொண்டனர்.இந்த ரோந்து பணி தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட வன அலுவலர் குகனேஷ் தெரிவித்துள்ளார்.