உள்ளூர் செய்திகள்

தேர்தல் கூட்டணி குறித்து இப்போது பேச வேண்டிய அவசியமில்லை- திருமாவளவன் எம்.பி. பேட்டி

Published On 2022-11-19 09:55 GMT   |   Update On 2022-11-19 09:55 GMT
  • தேர்தல் கூட்டணி குறித்து இப்போது பேச வேண்டிய அவசியமில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
  • 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பர பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

பேச வேண்டிய அவசியமில்லை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 6 பேர் எதிர்த்து, மத்தியஅரசு மறுசீராய்வு மனுதாக்கல் செய்தது எதிர்பார்த்த ஒன்றுதான். இது அவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது. அந்த 6 பேர் சார்பிலும் வககீல்கள் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி சட்டப்படி எதர்கொள்ளப்படும். இதனால் 6 பேரின் விடுதலை ரத்து செய்யப்படாது என நம்புகிறோம்.

த மிழக அரசின் மழைக்கால நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் பேசலாம். இப்போது பேச வேண்டிய அவசியமில்லை. தி.மு.க.கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது.

மத்திய அரசு பிடிவாதம்

திருமாந்துறை, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளின் ஊழியர்களின் போராட்டம் குறித்து, ஏற்கனவே சம்பந்தப்பட்ட மத்திய இைண மந்திரியிடம் மனு கொடுத்திருக்கிறோம். கூட்டத் தொடரின்போது சம்பந்தப்பட்ட மத்திய மந்திரியை சந்தித்து பேச உள்ளோம்.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், வழக்கில் இருந்து வெளியே வர முடியாதபடி வழக்கை விரைந்து நடத்தி தண்டணை பெற்று தர தமிழக அரசு நடவடிக்கை வேண்டும்.

மத்திய அரசு நீட் தேர்வு விசயத்தில் பிடிவாதமாக உள்ளது, மாநில அரசு ஒன்றுக்கு இருமுறை சட்ட மசோதா அனுப்பியும் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. மக்களுக்கு அடிப்படை வசதிக்கு தேவையான நிதி பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி போதவில்லை இருந்தாலும் தமிழக அரசு மூலம் வலியுறுத்தி அடிப்படை வசதி செய்து தருவேன்.

Tags:    

Similar News