அரசு கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
- ஹிட்டாச்சி, ஜிடெக், எல்காம்போ எலெக்ட்ரானிக்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆகிய தனியார் நிறுவனங்களை சேர்ந்த வேலை வாய்ப்பு அலுவலர்கள் நேர்முகத் தேர்வு நடத்தினர்.
- கல்லூரியுடன் ஹிட்டாச்சி நிறுவனம் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மற்றும் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் பாரதி கலையரங்கில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் நா.தனராஜன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் தனியார் நிறுவன வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் சிங்காரவேலு, தஞ்சாவூர் மாவட்ட லயன்ஸ் சங்கம் முத்துக்குமரன், கண்ணன், வாசு, ஹிட்டாச்சி நிறுவன வேலை வாய்ப்பு நியமன அலுவலர் சரவணன் தலைமையில் ஹிட்டாச்சி, ஜிடெக், எல்காம்போ எலெக்ட்ரானிக்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆகிய தனியார் நிறுவனங்களை சேர்ந்த வேலை வாய்ப்பு அலுவலர்கள் நேர்முகத் தேர்வு நடத்தினர்.
முகாமில் 57 பேர் கலந்து கொண்டனர். இதில் 15 பேருக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும், ஆண்டு தோறும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் கல்லூரியுடன் ஹிட்டாச்சி நிறுவனம் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர். விழாவில் பேராசிரியர்கள் முனைவர் ராணி, பழனிவேல், ஞானசேகரன், ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.