உள்ளூர் செய்திகள் (District)

ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் மரக்கன்றுகள் நட்டபோது எடுத்தபடம்.


கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி ஊராட்சியில் 3000 மரக்கன்றுகள் நடும் விழா

Published On 2022-06-06 09:19 GMT   |   Update On 2022-06-06 09:19 GMT
  • கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி ஊராட்சியில் 3000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
  • இதில் சமூக ஆர்வலர்- பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் லிங்கம்பட்டி ஊராட்சியில் சுற்றுப்புற சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் பிச்சையம்மாள் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணை தலைவர் சூசை முன்னிலை வகித்தார். விழாவிற்கு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பரமேஸ்வரி பாலமுருகன், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் சங்கர சுப்பிரமணியன், ஓவர்சியர் வடிவேல்முருகன், வார்டு உறுப்பினர் சேவியர் லாரன்ஸ், ஊராட்சி செயலாளர் தேவிகா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் சுப்புராஜ் கோவில்பட்டி நகர் மன்ற முன்னாள் உறுப்பினர் ஜெமினி, சமூக ஆர்வலர் மாடசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் 3000 மரக்கன்றுகள் நடப்பட்டது.

Tags:    

Similar News