உள்ளூர் செய்திகள்

சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவகத்தில் மரக்கன்று நடும் போது எடுத்த படம்.

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

Published On 2023-06-07 09:17 GMT   |   Update On 2023-06-07 09:17 GMT
  • ஏரிக்கரைகள், சாலை யோரங்கள் மற்றும் பொது இடங்களில் மரம் நடும் பணிகள் நடைபெற்றது.
  • தென்னை கன்றுகள் உட்பட சில்வர் ஹூக் போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டன.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 கிராம ஊராட்சிகளிலும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் உள்ள ஏரிக்கரைகள், சாலை யோரங்கள் மற்றும் பொது இடங்களில் மரம் நடும் பணிகள் நடைபெற்றது.

இதன் தொடக்கமாக காமன்தொட்டி கிராம ஊராட்சிக்குட்பட்ட சப்படி அருகில் உள்ள தின்னூர் ஏரிகரையில் சில்வர்ஹூக், நல்லி, புங்கன் மற்றும் பாதாம் மரக்கன்றுகள் நடப்பட்டது.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வன சரகர், ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பணியாளர்களை கொண்டு நடப்பட்டன.

மேலும் சூளகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல்ரவிகுமார், கோபாலகிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விவே கானந்தன், ஜேம்ஸ்குமார், உமாசங்கர், காமராஜ், முருகன், வெங்கடேசன் மற்றும் சூளகிரி வனசரகர் தவமுருகன் மற்றும் ஊழியர்கள், அலுவலகப்பணியாளர்கள் மூலம் ஆரஞ்சு, சாத்துகுடி, பட்டர் புரூட், வாட்டர் ஆப்பிள், பாதாம், கொய்யா மற்றும் தென்னை கன்றுகள் உட்பட சில்வர் ஹூக் போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டன.

சூளகிரி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் சுமார் 3800 மரக்கன்றுகள் நட்டு சுற்றுச் சூழலை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News