உள்ளூர் செய்திகள்

பேரணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2023-03-10 09:51 GMT   |   Update On 2023-03-10 09:51 GMT
  • நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.
  • முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையில் நகராட்சி சார்பாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, பேரணியில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

பேரணிக்கு முன்பாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக நடைமுறையில் உள்ள பீங்கான், கிளாஸ் மற்றும் மண் பாத்திரங்களும், பேப்பர் கப், பேப்பர் பிளேட் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான அனைத்து பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டது.

அதனை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொ ன்ராஜ் ஆலிவர், மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பார்வையிட்டதோடு தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.

பேரணியின் போது பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய துண்டு பிரசுரங்களும், விளம்பரப் பதாகைகளும் ஏந்தி சென்றனர்.

தொடர்ந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதுகு தண்டுவட சிறப்பு சிகிச்சை பகுதி மாவட்ட கலெக்டர் துவங்கி வைத்தார்.

முதுகு தண்டுவடம் பாதிக்க ப்பட்டவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் ஆலோச னைகளும் மருத்து வமனை மருத்துவர்களால் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News