உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு பருத்திகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகளை படத்தில் காணலாம்.

போச்சம்பள்ளி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.32 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

Published On 2022-07-14 10:03 GMT   |   Update On 2022-07-14 10:03 GMT
  • பருத்தி ஏலத்தில் ரூ.32 லட்சம் மதிப்பில் 800 மூட்டை பருத்தி வருகையால் அமோக ஏலம் நடைபெற்றது.
  • இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தும், பருத்தி விற்பனைக்கான தொகையை உடனடியாக பெற்று சென்று மகிழ்ந்தனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 2-வது வாரமாக நடைபெற்று வந்த பருத்தி ஏலத்தில் ரூ.32 லட்சம் மதிப்பில் 800 மூட்டை பருத்தி வருகையால் அமோக ஏலம் நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பருத்தி வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்ததில் நல்ல விலை போனது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தும், பருத்தி விற்பனைக்கான தொகையை உடனடியாக பெற்று சென்று மகிழ்ந்தனர்.

இதனையடுத்து கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் மேலாண்மை இயக்குநர் மற்றும் பொது மேலாளரான சுந்தரம் உத்தரவின் பேரிலும், கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் ஜெயபாலன் தலைமையிலும் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவு சங்க செயலாளர் முருகன் மற்றும் இளநிலை உதவியாளர் விஜியன், கூட்டுறவு சங்க பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News