உள்ளூர் செய்திகள்

வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தது.

வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து போலீசார் சோதனை

Published On 2023-03-07 09:27 GMT   |   Update On 2023-03-07 09:27 GMT
  • 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
  • உரிய பாதுகாப்புடன் இருப்பதாக வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

திருவாரூர்:

வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யுமாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போலீசாருக்கு உத்தர விட்டுள்ளார்.

தங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அது குறித்து தகவல் தெரிவிக்குமாறும் அரசு சார்பில் வட மாநில தொழிலாளர்களுக்காக தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் ஜவுளிக்க டைகள், உணவகங்கள், ரைஸ்மில்கள்உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் கட்டிட தொழில்கள் என பீகார், ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 3 ஆயிரத் திற்கும் மேற்பட்டதொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களது பாது காப்பினை உறுதி செய்யு மாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் காவல்துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளார்.

அதன் பேரில் 500க்கும் மேற்பட்டவர்களை போலீசார் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளனவா, மிரட்டல்கள் இருந்து வருகிறதா, தாக்கப்படுகிறார்களா என கேட்டனர்.

அதன்படி திருவாரூர் நகரம், மத்திய பல்கலைக்கழகம், வண்டம்பளையம் தனி யார்நவீன அரிசி ஆலை மற்றும்நீடாமங்கலம், மன்னார்குடி, பரவாக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தாங்கள் அனைவரும் உரிய பாதுகாப்புடன் இருந்து வருவதாகவட மாநில தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News