- குழந்தைகளின் நடனம் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
- கேடயங்கள் கொடுத்து கவுரவிக்கப்பட்டனர்.
அரவேணு,
கோத்தகிரி மார்க்கெட் திடலில் குன்றின் குரல்கள் சார்பில் 9-ம் ஆண்டு தமிழர் திருநாள் பொங்கல் விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து வந்த குழந்தைகளின் நடனம் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை சில்ரன் சேரிடபில் டிரஸ்ட், விடியல் டிரஸ்ட் மற்றும் கோத்தகிரி ரேடியோ தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியில் பொதுமக்கள் குழந்தைகள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். மேலும் ஆத்தங்குடி இளையராஜாவின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கு கோத்தகிரி ஒன்றிய செயலாளர் கண்ணன், கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கோத்தகிரி பகுதிகளில் சிறப்பாக செயல்பட்ட சேவை மையங்களின் உரிமையாளர்களுக்கு கேடயங்கள் கொடுத்து கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.