பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி தபால் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
- ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க கோட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
- வருகிற 10-ம் தேதி தபால் துறை ஊழியர்கள் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.
நெல்லை:
அனைத்திந்திய அஞ்சல் ஓய்வூதியர்கள் சங்கம் மற்றும் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பாளை தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க கோட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை கோட்ட செயலாளர் சண்முக சுந்தரராஜ் விளக்கி பேசினார்.
இதில் நெல்லை மாவட்ட ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் முத்துசாமி, விஜயராஜா, செல்லதுரை, கண்ணன், கோட்ட பொருளாளர் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அஞ்சல் சேவைகளை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 10-ம் தேதி தபால் துறை ஊழியர்கள் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.
அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஓய்வூதியர்கள் தெரிவித்தனர்.