உள்ளூர் செய்திகள்

திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்த காட்சி.

பொத்தனூர் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2023-05-23 07:38 GMT   |   Update On 2023-05-23 07:38 GMT
  • மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 7-ந் தேதி இரவு கிராம சாந்தி, கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் விழாவுடன் தொடங்கியது.
  • கடந்த 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பொத்தனூர் புதுப்பாளை யம் மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 7-ந் தேதி இரவு கிராம சாந்தி, கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் விழாவுடன் தொடங்கியது.

கடந்த 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தினந்தோ றும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராத னைகளும், சிறப்பு அலங்கா ரமும் நடைபெற்றது. 12-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், 14-ந் தேதி மறு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை அம்மன் தினந்தோறும் இரவு சிம்மம், ரிஷபம், அன்னபட்சி உள்ளிட்ட வாகனங்களில் முக்கிய வீதிகள் வழியாக உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று முன்தினம் மாலை வடிசோறு, மாவிளக்கு மற்றும் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அம்மன் ரதம் ஏறுதலும், மாலை மகா மாரியம்மன் திருத்தேரில் முக்கிய விதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று மாலை 3 மணிக்கு ஆண்கள் பூ மிதித்தல் நிகழ்ச்சியும், பெண்கள் பூவாரி போட்டுக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) பொங்கல் மற்றும் மா விளக்கு பூஜை யும், அக்னி சட்டி எடுத்தல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (வியாழக்கி ழமை) கம்பம் ஆற்றுக்கு செல்லுதலும், கிடா வெட்டும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

26-ந் தேதி மஞ்சள் நீராடலும், இரவு அம்மன் முத்துப்பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், 27-ந் தேதி ஊஞ்சல் உற்சவ மும், 28-ந் தேதி காலை 6 மணிக்கு யாக பூஜை, அன்ன பாவாடை மற்றும் மகாதீபா ராதனையும் நடைபெறு கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பொத்தனூர் மகாமாரியம்மன் கோவில் தர்மகர்த்தா, திருவிழாக்கு ழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News