உள்ளூர் செய்திகள்

பொத்தனூர் வெள்ளக்கல் மாரியம்மன் கோவில்தேர்திருவிழா நடத்த அமைதி பேச்சுவார்த்தை

Published On 2023-04-08 09:34 GMT   |   Update On 2023-04-08 09:34 GMT
  • தேர் திருவிழா நடத்துவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை பரமத்திவேலூர் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் கலைச்செல்வி முன்னிலையில் நடைபெற்றது.
  • இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் செந்தில்குமார், வருவாய் துறையினர், போலீசார் மற்றும் அனைத்து தரப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூரில் வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர் திருவிழா நடத்துவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை பரமத்திவேலூர் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் கலைச்செல்வி முன்னிலையில் நடைபெற்றது.

இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் செந்தில்குமார், வருவாய் துறையினர், போலீசார் மற்றும் அனைத்து தரப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையில், தாசில்தார் கலைச்செல்வி அறிவுரையின்படி சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் அமைதியான முறையில் திருவிழாவை நடத்த அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

மேலும் கோவில் திருவிழா, இந்து சமய அறநிலையத்துறை மூலம் நடத்தப்பட வேண்டும். இந்து சமய அறநிலைய துறையினர் தவிர தனிப்பட்ட நபர்கள் யாரும் நன்கொடைகள் வசூலிக்க கூடாது.

சாமி ஊர்வலத்தின் போது எந்த தரப்பினரும் தனது சமூகத்தை முன்னிலை படுத்தி ஆடைகள் மற்றும் தொப்பிகள் அணியக்கூடாது. வெட்டும் குதிரை ஊர்வலம் வரும் 23-ந் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை மட்டும் நடைபெற வேண்டும். தேரோட்டம் வரும் 25-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற வேண்டும்.

கோவில் பெயருடன் வெள்ளை நிற பனியன் அணிந்த பொத்தனூரைச் சேர்ந்த 60 பேர் மட்டும் தேருக்கு சன்னக்கட்டை போட வேண்டும். திருவிழா நடைபெறும் போது எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாத வகையில் அமைதியான முறையில் திருவிழா நடத்தப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் வருவாய்த்துறையினர் போலீசார் மற்றும் அனைத்து தரப்பினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News