உள்ளூர் செய்திகள்
- நெடுஞ்சாலைத் துறையால் சாலை விரிவாக்கப்பணி நடைபெற உள்ளது.
- காவேரி திருமண மண்டபம் முதல் கல்லுக்குளம் வரை உள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மணி மண்டபம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மின்பாதையில் நெடுஞ்சாலைத் துறையால் சாலை விரிவாக்கப்பணி மற்றும் மின்கம்பம் நடும் பணி நடைபெற உள்ளது.
எனவே பழைய வீட்டுவசதி வாரிய ரவுண்டானா முதல் காமாட்சி ஆஸ்பத்திரி வரை உள்ள மெயின்ரோடு, ராஜேஸ்வரி நகர், நிர்மலா நகர் போன்ற பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
மேலும் அண்ணாநகர் வழித்தடத்தில் உள்ள மின் பாதையில் காவேரி திருமண மண்டபம் முதல் கல்லுக்குளம் வரை உள்ள பகுதிகளிலும் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.