பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு
- நீட் தேர்வில் சிறப்பு பெற்ற மாணவருக்கு பாராட்டு.
- ரெயில் நிலையத்தில் தவறவிட்ட பணத்தை அலுவலரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனரை பாராட்டி பரிசளித்தார்.
சீர்காழி:
சீர்காழியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
சீர்காழியில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மாநில துணை தலைவர் ராஜாராமன், மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம், மாவட்ட செயலாளர் (கடலூர்) சண்முகம், தேவார ஆசிரியர் ரத்தினசபாபதி ஓதுவார், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். சீர்காழி கிளை தலைவர் கோவிந்தராஜன் வரவேற்றார்.
இதில் மாநில தலைவர் பண்ணை. சொக்கலிங்கம் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றி, 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு தொகை மற்றும் நீட் தேர்வில் சிறப்பு பெற்ற மாணவருக்கு பாராட்டு மற்றும் புகைவண்டி நிலையத்தில் தவறவிட்ட ரூ.62 ஆயிரத்து 500 பணத்தை நிலைய அலுவலரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர் சரவணன் ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
தொடர்ந்து 80 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு கவுரவிப்பு நிகழ்வு நடந்தது.
இதில் சங்கத்தை சேர்ந்த கார்த்திகேயன், கார்த்தி, இளங்கோவன், சவுந்தரபாண்டியன் மற்றும் சீர்காழி, ஆச்சாள்புரம், குளத்தின்ங்கநல்லூர், கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு கிளை சங்க நிர்வாகிகள், பொறு ப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்.