வாசிப்பு மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு
- தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட வாசிப்பு மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
- வாசிப்பு மாரத்தான் போட்டியில் அதிக அளவில் நட்சத்திரங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும், மாணவர்கள் வாசிக்கும் வேகம் அதிகரித்ததையும் பாராட்டி ்பேசினர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி வட்டம் தேசிங்குராஜபுரம் கிராமத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட வாசிப்பு மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா தேசிங்குராஜபுரம் இல்லம் தேடி கல்வி மையத்தில் நடைபெற்றது. இதில், தேசிங்குராஜபுரம் இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர் வே.ரேவதி வரவேற்றார். ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத்தலைவர் மதிப்புறு முனைவர் நா.துரைராயப்பன் தலைமை வகித்தார்.
வட்டார கல்வி அலுவலர்.பா அறிவழகன், வட்டார கல்வி அலுவலர்இரா. பாலசுப்பிரமணியன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ப. வரதராஜன் ஆகியோர் மையத்தையும் நூலகத்தையும் பார்வையிட்டு, வட்டார அளவில் வாசிப்பு மாரத்தான் போட்டியில் தேசிங்குராஜபுரம் மையத்தில் அதிக அளவில் நட்சத்திரங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும், மாணவர்கள் வாசிக்கும் வேகம் அதிகரித்ததையும் பாராட்டி ்பேசினர். பரிசுப்பொருட்களை தனது பிறந்தநாளை முன்னிட்டு மு.துரைமுருகன் மற்றும் நா.துரைராயப்பன் ஆகியோர் வழங்கினர். கோவி.வேதகிருஷ்ணன் நன்றி கூறினார்.