விளாத்திகுளம் அருகே பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்- மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
- பொதுக் கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- இலவச பயணத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.1200 வரை சேமிப்பு ஆகிறது என்று எம்.எல்.ஏ. பேசினார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பொதுக் கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் நிகழ்ச்சியில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசுகையில்:-
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி அளிக்கும் திட்டம் நேற்று தொட ங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மகளிர் தங்களது வாழ்வா தரத்தை பெருக்கி கொள்ள முடியும். கிராம புற பகுதிகளிலும் குடியிருப்பு இல்லாதவர்களுக்கும் குடியிருப்பு வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். விளாத்திகுளம் தொகுதியில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் கூட்டு குடிநீர் திட்டம் கிடைக்கும் வகையில் ரூ.608 கோடியில் குடிநீர் திட்டம் கொண்டு வந்துள்ளார். முதல்-அமைச்சர் கடந்த முறை பொங்கல் பரிசு குறித்து குற்றச்சாட்டு வைத்ததன் வெளிப்பாடின் காரணமாக அப்பொருட்கள் வழங்க பட முடியவில்லை. ஆனாலும் பொதுமக்களுக்கு ரூ.1,000 ஊக்கத் தொகையாக கொடுக்கப்படும் என முதல்-அமைச்சர் உத்தர விட்டுள்ளார். அதோடு சேர்த்து பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
திராவிடம் மாடல் அரசு பதவி ஏற்ற உடன் மகளிருக்கு பஸ்களில் இலவச பயணம் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.700 முதல் ரூ.1200 வரை சேமிப்பு ஆகிறது என்று பேசினார்.