உள்ளூர் செய்திகள்

ஆதரவற்ற மாணவர்களின் கல்விக்காக செருப்பு பாலிஷ் போட்டு நிதி சேகரித்த பேராசிரியர்

Published On 2022-10-21 10:40 GMT   |   Update On 2022-10-21 10:40 GMT
  • குன்றத்தூர் பஸ் நிலையத்தில் நேற்று காலை செருப்புகளுக்கு பாலிஷ் செய்து நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார்.
  • செருப்பு மற்றும் ஷூக்களுக்கு பாலிஷ் செய்து அதில் வரும் தொகையை வைத்து ஆதரவற்ற மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார்.

குன்றத்தூர்:

தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் செல்வகுமார். இவர் கடந்த 18 ஆண்டுகளாக விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று செருப்பு மற்றும் ஷூக்களுக்கு பாலிஷ் செய்து அதில் வரும் தொகையை வைத்து ஆதரவற்ற மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார்.

இந்த நிலையில் குன்றத்தூர் பஸ் நிலையத்தில் நேற்று காலை செருப்புகளுக்கு பாலிஷ் செய்து நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு சென்ற கோவூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர் ரூ.10 ஆயிரத்தை வழங்கினார். அதே போன்று குன்றத்தூர் நகர மன்ற தலைவர் சத்தியமூர்த்தியும் நிதி வழங்கினார்கள்.

இதனை கண்ட அந்த பகுதி மக்கள் தாமாக முன்வந்து தங்களது செருப்புகளுக்கு பாலிஷ் செய்துவிட்டு ஏழை மாணவர்களின் கல்விக்காக நிதிகளை வழக்கினார்கள்.

ஏழை மாணவர்களின் கல்விக்காக பேராசிரியர் ஒருவர் பொதுமக்களின் செருப்புகளுக்கு பாலிஷ் செய்து நிதி சேகரிப்பதை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

Tags:    

Similar News