ராயகிரி பேரூராட்சியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள்
- நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத்தலைவர் இந்திரா பூசைப்பாண்டியன் தலைமை தாங்கினார்.
- வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் ராயகிரி பேரூராட்சியில் நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 19 லட்சம் செலவில் 6, 7 -வது வார்டுகளில் காந்தி தெரு, பவுண்டு தொழு தென்வடல் தெரு, 8-வது வார்டில் சிவகாமி அம்மையார் தெரு, காமராஜர் வீதி, கிணற்று தெரு, 10-வது வார்டில் வடக்கு மாரியம்மன் கோவில் தெரு, மண்டபம் தெரு, நடுத்தெரு, 11-வது வார்டு மண்டபம் தெரு, 12-வது வார்டு தெற்கு, மாரியம்மன் கோவில் தெரு ஆகிய தெருக்களில் பேவர்பிளாக் கல் பதித்தல் மற்றும் வாறுகால் அமைத்தல் போன்ற திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத்தலைவர் இந்திரா பூசைப்பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் குறிஞ்சி மகேஷ், செயல் அலுவலர் சுதா ஆகி யோர் முன்னிலை வகித்தனர். வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ராயகிரி நாடார் உறவின்முறை தலைவர் அம்மையப்பன், மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், முன்னாள் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் விவேகானந்தன், தி.மு.க. வார்டு செயலாளர்கள் சின்ன மாடசாமி, செல்வராஜ், தங்கவேலு, பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் சேவகபாண்டியன், காளியப்பன், சின்னத்தாய், தங்கத்துரை, சிவன், பாண்டி, தமிழ்ச்செல்வி, பராசக்தி, கலைச்செல்வி, பேச்சியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.