உள்ளூர் செய்திகள்

கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.


கடலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2023-04-26 08:37 GMT   |   Update On 2023-04-26 08:37 GMT
  • சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றி வழங்க வேண்டும்,
  • இதற்கு பாலமுருகன் தலைமை தாங்கினார். பொருளாளர் கோபாலன் முன்னிலை வகித்தார்.

கடலூர்:

தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கம் சார்பில் ஜாக்டோ ஜியோ மற்றும் 3 அமைச்சர்கள் பேச்சு வார்த்தையில் ஏற்றுக் கொண்ட வாக்குறுதி களை நிறைவேற்ற வலியுறுத்தியும், அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்டவற்றை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றி வழங்க வேண்டும். அரசு துறையில் உள்ள காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு பாலமுருகன் தலைமை தாங்கினார். பொருளாளர் கோபாலன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட துணை தலைவர் (ஓய்வுதியர் சங்கம்) கருணாகரன், கூட்டு றவுத்துறை மாநில பொரு ளாளர் பாலகிருஷ்ணன் மாநிலத் துணைத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

Similar News