உள்ளூர் செய்திகள் (District)

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

Published On 2023-03-20 09:10 GMT   |   Update On 2023-03-20 09:10 GMT
  • 70 ஆயிரம் லிட்டர் வரை நிலவேம்பு கசாயம் தயார் செய்து மக்களுக்கு வழங்கி வருகிறார்.
  • சித்த மருத்துவருக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி கிராமத்தில் வசித்து வரும் சித்தமருத்துவர் அஜ்மல்கான் இலவச மருத்துவ சேவையை செய்து வருகிறார்.

கடந்த 20 ஆண்டு காலமாக இப்பணியை செய்து வரும் இவர் வருமுன் காப்போம் என்ற விழிப்புணர்வு சேவை மையத்தை நடத்தி வருகிறார் .

இதன் மூலம் டெங்கு மலேரியா மற்றும் மர்ம காய்ச்சலுக்கு ஆண்டுக்கு 70 ஆயிரம் லிட்டர் வரை நிலவேம்பு கசாயம் சொந்த பணத்தில் தயார் செய்து அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக வழங்கிவருகிறார்.

கொரோனா காலத்தில் கபசுர குடிநீர் மற்றும் விழிப்புணர்வு பணியை தொடங்கிய இவரது சமூக சேவை 750 நாட்களை கடந்துள்ளது.

கொரோனா முதல் அலையில் இருந்து மூன்றாவது அலை வரை நாகை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு இலவசமாக சித்த மருத்துவ சேவையை செய்து வருகிறார்.

திருமருகல், திட்டச்சேரி, நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரணியம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் கொரோனா, தற்பொழுது நிலைவி வரும் இன்புளுன்சா குறித்து இலவசமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சித்த மருத்துவருக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் பணி தனக்கு மன திருப்தியை அளிப்பதாக சித்த மருத்துவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News