உள்ளூர் செய்திகள்

பணத்தை மீட்டு தர போலீசில் புகார் செய்ய வந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.

செஞ்சி அருகே சீட்டு பணம் ரூ.50 லட்சம் மோசடி போலீசில் பொதுமக்கள் புகார்

Published On 2023-05-19 07:29 GMT   |   Update On 2023-05-19 07:29 GMT
  • 70 பேர் சேர்ந்து சீட்டு நடத்தி வருகின்றனர்.
  • சீட்டு சேமிப்பில் ரூ56 லட்சம் பணம் வாங்கினார்.

விழுப்புரம்:

செஞ்சியை அருகே உள்ள ஆர்.நயம்பாடி மதுரா சவுட்டூர் என்ற பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 78). இவருடன் அதே பகுதியை சேர்ந்த 70 பேர் சேர்ந்து சீட்டு நடத்தி வருகின்றனர். இந்த சீட்டின் மூலம் வரும் வருமானத்தை அந்த பகுதி ஊர்பொது திருவிழா போன்றவற்றிற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நயம்பாடி மதுரா சவுட்டூர் பகுதிக்கு அருகில் உள்ள ஆலம்பூண்டியைச் சேர்ந்த ரபியிர் மற்றும் அவரது மனைவி ஜாகிர் பீமாவை இந்த சீட்டு பணம் சேமிப்பில் சேர்த்துள்ளனர். ரபியிர் ஆலம்பூண்டியில் செருப்பு கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ரபியிர் சீட்டு சேமிப்பில் ரூ56 லட்சம் பணம் வாங்கினார். இதன்பின்னர் வாங்கிய சீட்டு பணத்திற்கு ரூ.6 லட்சம் மட்டும் பணம் செலுத்தியுள்ளார். பின்னர் கடந்த 5 மாதமாக மீதி பணம் செலுத்தாமல் ரபியிர் சென்னையில் தலைமறைவாகி விட்டார். இதுபற்றி தகவல் அறிந்த சவுட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரபியிர் மனைவி ஜாகீர் பீமாவிடம் சென்று சீட்டு பணம் கேட்டனர். அதற்கு ஜாகீர் பீமா, ரபியிருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சீட்டு பணத்தை ரபியிரிடம் சென்று கேளுங்கள் என்று கூறினார். இதுகுறித்து கிருஷ்ணன் உள்ளிட்ட சவுட்டூர் கிராம மக்கள் சீட்டு பணத்தை ஏமாற்றிய ரபியிரை கைது செய்து பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து இதுபோன்று பணமோசடி அரங்கேறி வருகிறது.

Tags:    

Similar News