உள்ளூர் செய்திகள்

மின்கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளதை படத்தில் காணலாம்.

பூலாங்குளத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்ற வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-11-14 09:09 GMT   |   Update On 2022-11-14 09:09 GMT
  • குளத்தின் நடுவே காற்றாலை மின்சாரம் மற்றும் தோட்டங்களுக்கு செல்லும் உயர் அழுத்தமின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன.
  • திடீரென 4-க்கும் மேற்பட்ட உயர் அழுத்த மின்சார கம்பங்கள் தண்ணீருக்குள் சாய்ந்து விழுந்தது.

தென்காசி:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளம் கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரியகுளம் எனும் குளத்தின் நடுவே காற்றாலை மின்சாரம் மற்றும் தோட்டங்களுக்கு செல்லும் உயர் அழுத்தமின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன.

அதில் ஒரு சில மின்கம்பங்கள் சாய்ந்து குளத்திற்குள் விழும் நிலையில் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டும் இந்த குளத்தில் முழுமையாக தண்ணீர் நிரம்பிய வேலையில் திடீரென 4-க்கும் மேற்பட்ட உயர் அழுத்த மின்சார கம்பங்கள் தண்ணீருக்குள் சாய்ந்து விழுந்தது. நல்வாய்ப்பாக அப்போது குளத்திற்குள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

தற்போது எஞ்சிய மின்கம்பங்களும் சாயும் தருவாயிலேயே உள்ளன. இன்னும் ஒரு வாரத்திற்குள் அந்த குளத்திற்கு தண்ணீர் வர இருப்பதால் அதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர்கள் சரி செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News