உள்ளூர் செய்திகள்

பறவைகள் சரணாலயம் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.


கடையம் அருகே பறவைகள் சரணாலயம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

Published On 2022-09-03 08:47 GMT   |   Update On 2022-09-03 08:47 GMT
  • தென்காசி மாவட்டம் கடையம் அருகே வாகைக்குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
  • சரணாலயம் அமைத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என கருத்தைக் கூறி கடும் எதிர்ப்பை விவசாயிகள் பதிவு செய்தனர்.

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே வாகைக்குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட வருவாய் ஜெய்னுலாப்தீன், மாவட்ட வன அலுவலர் முருகன், தென்காசி வட்டாச்சியர் அருணாசலம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர்(மத்திய மற்றும் மாநில திட்டங்கள்) நல்லமுத்துராஜா, கடையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஞானசேகரன், வேளாண்மை அலுவலர் அபிராமி, துணை வேளாண்மை அலுவலர் சுப்ராம், தோட்டக்கலை அலுவலர் சபா பாத்திமா, வேளாண்மை உதவி அலுவலர்கள் கமல்ராஜன், பேச்சியப்பன், தோட்டக்கலை உதவி அலுவலர் பார்த்தீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பஞ்சாயத்து தலைவர்கள் ரவணசமுத்திரம் முகமது உசேன் வீராசமுத்திரம் ஜீனத் பர்வீன் யாகூப்,மந்தியூர் கல்யாண சுந்தரம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வின்சென்ட் மற்றும் வாகைக்குளம், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பெரும்பாலான மக்கள் பறவைகள் சரணாலயம் அமைக்ககூடாது என்றும் , சரணாலயம் அமைத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என கருத்தைக் கூறி கடும் எதிர்ப்பை விவசாயிகள் பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News