ஆலங்குடி புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றம்
- ஆலங்குடி புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றம்
- 2-ந்தேதி காலை திருவிழா கூட்டு பாடல் திருப்பலியும் தொடர்ந்து புனித அந்தோணியாரின் கொடி இறக்கமும் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை :
ஆலங்குடி அருகே உள்ள கே.ராசியமங்கலம் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவையொட்டி புனிதம் செய்து கொடியேற்று விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் ஆலயத்தை சுற்றி கொடி பவனியும் நான்கு புறத்திலும் அதிர வைத்த வாண வெடிகளும் அதனைத்தொடர்ந்து கொடியேற்றமும் நடைபெற்றது.
இதனைதொடர்ந்து கொடியேற்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. இன்று மாலை முதல், வருகிற 30-ந்தேதி வரை நவநாள் திருப்பலியும் தேர்ப்பவனியும் நடைபெற உள்ளது. விழாவில் வரும் 1-ந்தேதி அன்று மாலை ஏழு மணிக்கு அருட்தந்தையர்களால் திருவிழா கூட்டுப்பாடல் திருப்பலியும், அதனை தொடர்ந்து புனித அந்தோணியாரின் ஆடம்பர அலங்கார தேர்பவனியும் நடைபெற உள்ளது.
இதனைதொடர்ந்து 2-ந்தேதி காலை திருவிழா கூட்டு பாடல் திருப்பலியும் தொடர்ந்து புனித அந்தோணியாரின் கொடி இறக்கமும் நடைபெற உள்ளது. விழாவையொட்டி தினமும் இரவு கலை நிகழ்ச்சிகளும், கிராமிய பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. விழாவில் கோடி அற்புதர் புனித அந்தோணி யாரின் இறை மக்கள் மற்றும் பங்கு அருட்பணியாளர்கள் கிராம கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.