உள்ளூர் செய்திகள் (District)

சர்க்கரை நோய் விழிப்புணர்வு பரிசோதனை முகாம்

Published On 2022-11-15 09:23 GMT   |   Update On 2022-11-15 09:23 GMT
  • சர்க்கரை நோய் விழிப்புணர்வு பரிசோதனை முகாம் நடந்தது
  • டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில்

புதுக்கோட்டை:

உலக சுகாதார மையம் மற்றும் சர்வதேச சர்க்கரை நோய் கூட்டமைப்பு இணைந்து இன்சுலின் மருந்தை கண்டுபிடித்த பேண்டிங் என்ற விஞ்ஞானி பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதியை உலகமெங்கும் "உலக சர்க்கரை நோய் தினம்" என்று அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு பரிசோதனை முகாம் மற்றும் உணவுக் கண்காட்சி நடைபெற்றது.

மாவட்ட அரசு மருத்துவ சங்கத் தலைவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் சலீம் அப்துல் குத்தூஸ், இருதய நோய் சிறப்பு மருத்துவர் வெங்கடேசன், மகப்பேறு மற்றும் மகளிர் நோய் சிறப்பு மருத்துவர் அனிதா தனசேகரன் மற்றும் இருக்கை மருத்துவர் பிரியங்கா கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் கே.ஹெச்.சலீம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

விழாவில் உணவுக் கண்காட்சி மற்றும் சர்க்கரை நோயின் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டு மக்களுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

உணவுக் கண்காட்சி ஏற்பாடுகளை உணவியல் நிபுணர் மகாலெட்சுமி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயபாரதி ஏற்பாடுகளை செய்திருந்தனர். மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப் அனைவருக்கும் நன்றி கூறினார். இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அனைவருக்கும் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News