உள்ளூர் செய்திகள்

புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை

Published On 2022-11-08 07:40 GMT   |   Update On 2022-11-08 07:40 GMT
  • புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது
  • வாராப்பூர் ஊராட்சி பள்ளியில் நடந்தது

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வாராப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியின் கட்டிடம் ஆங்காங்கே விரிசலுற்று சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து மாணவர்களின் பாதுகாப்பை கருதி, வகுப்பறைகள் சமுதாயக்கூடத்திலும், நாடகமேடை வளாகத்திலும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பள்ளியின் நிலையை பள்ளியின் முன்னாள் மாணவரும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனருமான மருத்துவர் சேதுராமன் கவனத்திற்கு ஊராட்சிமன்றத்தலைவர் மலர்விழி நாகராஜன் கொண்டு சென்றார். இதையடுத்து இந்நிறுவனத்தின் சார்பில் சுமார் 1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டடம் கட்டித்தர முடிவு செய்யப்பட்டு அதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது. பூமி பூஜையில் மருத்துவர் சேதுராமன், காமினி குருசங்கர், ஊராட்சி மன்றத்தலைவர் மலர்விழி, மீனாட்சி மிஷன் பொறியாளர் கோபால், பொறியாளர் விஎன்ஆர்.நாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News