உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி

Published On 2023-01-06 07:42 GMT   |   Update On 2023-01-06 07:42 GMT
  • புதுக்கோட்டையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது
  • 17 நபர்களுக்கு ரூ.5 லட்சத்து 9 ஆயிரத்து 920 மதிப்பீட்டில் உதவித் தொகைகளை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் சமூகப்பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், யுனைடெட் வே ஆப் சென்னை நிறுவனத்திடமிருந்து நிதியுதவிகள் பெறப்பட்டது. அதன்படி, கொரோனாவால் கணவரை இழந்த தாய்மார்களுக்கு வாழ்வாதார உதவிகள் பெறும் 10 தாய்மார்களுக்கு மின்மோட்டாருடன் இணைந்த தையல் இயந்திரம், பெரிய கிரைண்டர், கறவைமாடு, தள்ளுவண்டிக் கடை, ஆடு அல்லது மாடு வாங்குவதற்காக ரூ.3 லட்சத்து 19 ஆயிரத்து 500 மதிப்பீட்டிலான உதவித் தொகைகளும், மேலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்லூரி கல்வி நிதி உதவிகள் பெறும் 7 நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 420 மதிப்பீட்டில் கல்வி உதவித் தொகைகளும் என மொத்தம் 17 நபர்களுக்கு ரூ.5 லட்சத்து 9 ஆயிரத்து 920 மதிப்பீட்டில் உதவித் தொகைகளை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனிதா, யுனைடெட் வே ஆப் சென்னை திட்ட அலுவலர் ஜெரசலோ வினோத், யுனைடெட் வே ஆப் சென்னை உதவி மேலாளர் அபிராமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News