உள்ளூர் செய்திகள் (District)

சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் கலந்துகொள்ள மாணவர்களுக்கு அழைப்பு

Published On 2022-11-18 09:12 GMT   |   Update On 2022-11-18 09:12 GMT
  • சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் கலந்துகொள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
  • 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

புதுக்கோட்டை:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பள்ளிக்கல்வித்துறை நடத்திய உலகத்திறனாய்வு தேர்வில் சிறப்பிடம் பெற்ற 14 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான ஆறு மாத கால சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

மிக இளம் வயதிலேயே திறனாய்வாளர்களைக் கண்டறிவது விளையாட்டு திறமையினை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சார்பில், புதுக்கோட்டை மாவட்ட பிரிவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கூடைப்பந்து விளையாட்டில் 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்களின் விளையாட்டு திறமைகளை கண்டறிந்து, அதில் தேர்வு செய்யப்படும் 10 மாணவியர் மற்றும் 10 மாணவர் களுக்கு 6 மாத காலத்திற்கு சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய உலக உடற்திறனாய்வு தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றவர்கள். 2020-2021 மற்றும் 2021-2022 மற்றும் 2022-2023 (தேர்வு நாள் வரை) ஆகிய கல்வியாண்டுகளில் அரசு, அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு அமைப்புகள் நடத்திய போட்டிகளில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் பதக்கம் வென்ற மாணவ,மாணவியா; இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

தேர்வு செய்யப்பட்ட 10 மாணவர்கள் மற்றும் 10 மாணவிகளுக்கு அவர்களது விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்தி சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவில் பதக்கங்களை வெல்லும் நோக்கில் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் தொடர்ந்து 6 மாத காலத்திற்கு பயிற்சி அளிக்கப்படும்.

சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் 14 வயதிற்குட்பட்ட விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் இணைய தள முகவரியில் வரும் 25தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்திற்கான சேர்க்கை வரும் 28 முதல் 30 ஆம் தேதிக்குள் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News