உள்ளூர் செய்திகள்

சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்த நகராட்சி நிர்வாகம்

Published On 2023-01-07 08:18 GMT   |   Update On 2023-01-07 08:18 GMT
  • சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை நகராட்சி நிர்வாகம் சார்பில் பிடிக்கபட்டது
  • சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்

அறந்தாங்கி:

அறந்தாங்கி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் நகரின் முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் நகராட்சி ஆணையர் லீமாசைமன் உத்தரவுபடி நகராட்சிப் பணியாளர்கள் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்த 50 க்கும் மேற்பட்ட மாடுகளைப் பிடித்து சட்டமன்ற அலுவலகம் எதிரே உள்ள வளாகத்தில் பூட்டி வைத்தனர். மேலும் சிறைபிடிக்கப்பட்ட மாடுகளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை கொடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் மாடுகளை தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாட்டின் உரிமையாளர்கள் தங்களுடைய மாட்டின் அடையாளத்தை கூறி ரூ 2 ஆயிரம் அபராதம் செலுத்தி மாடுகளை கூட்டிச் செல்லுமாறு நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags:    

Similar News