உள்ளூர் செய்திகள்
தோரணமலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு
- சித்தர்களால் வழிபட்ட பெருமையுடையது தோரணமலை முருகன் ஆலயம்.
- கிரிவலம் வந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள தோரணமலை கோவில் அகத்தியர், தேரையர் போன்ற சித்தர்களால் வழிபட்ட பெருமையுடையது. மலைமீது குகையில் முருகன் ஆலயம் அமைந்துள்ளது.
ஒவ்வொரு மாதம் பவுர்ணமி தோறும் தோரணமலையை சுற்றி கிரிவலம் நடந்து வருகிறது. இன்று புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற கிரிவலத்தில் திரளான பக்தர்கள் தோரணமலை முருகனுக்கு அரோகரா என சரண கோஷம் முழங்க பக்தி பஜனை பாடல்கள் பாடி சுமார் நான்கரை கிலோமீட்டர் சுற்றளவுள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.
கிரிவலம் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்ன தானம் மற்றும் பிரசாதங்கள் வழங்க பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கே.ஏ.செண்பகராமன் செய்திருந்தார்.