உள்ளூர் செய்திகள்

புரட்டாசி 3-வது சனிக்கிழமை- நெல்லையில் இருந்து நவதிருப்பதி தலங்களுக்கு 4 பஸ்கள் இயக்கம்- 200 பக்தர்கள் புறப்பட்டு சென்றனர்

Published On 2022-10-08 09:52 GMT   |   Update On 2022-10-08 09:52 GMT
  • போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் பிரசாத பை மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கி பயணத்தை தொடங்கி வைத்தார்.
  • இன்று காலை 7 மணிக்கு நவதிருப்பதி கோவில்களுக்கு மொத்தம் 4 பஸ்கள் புறப்பட்டன.

நெல்லை, அக்.8-

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சனிக்கிழ மைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழி பாடுகள் நடத்தப்படுவது வழக்கம்.

நவதிருப்பதி தலங்கள்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோவில்களுக்கு அந்த காலகட்டத்தில் ஏராளமான பக்தர்கள் சென்று தரிசனம் செய்வார்கள். இதில் தூத்துக்குடி மாவட்ட த்தில் உள்ள நவ திருப்பதி கோவில்களுக்கு பக்தர்கள் அதிகளவு சென்று வழிபடுவார்கள்.

இதையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சனிக்கிழமைகளில் பக்தர்கள் நவதிருப்பதி தலங்களுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வரும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்க ப்படுகின்றன. அதன்படி புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையையொட்டி நெல்லை புதிய பஸ் நிலை யத்தில் இருந்து இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

சிறப்பு பஸ்கள்

இன்று காலை 7 மணிக்கு நவதிருப்பதி கோவில்களுக்கு மொத்தம் 4 பஸ்கள் புறப்பட்டன. அதில் மொத்தம் 200 பக்தர்கள் புறப்பட்டு சென்றனர். அப்போது பஸ்சில் பயணித்தவர்களுக்கு நெல்லை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் பிரசாத பை மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கி பயணத்தை தொடங்கி வைத்தார்.

இதில் புதிய பஸ் நிலைய பார்வையாளர் முனியராஜ், போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த பஸ் நவ திருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில், நத்தம் விஜயாசன பெருமாள் கோவில், திருப்புளியங்குடி காய்சினவேந்த பெருமாள் கோவில், இரட்டை திருப்பதி அரவிந்த லோசனார் பெருமாள் கோவில், தேவர் பிரான் கோவில், பெருங்குளம் மாயக்கூத்தர் கோவில், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் ஆகிய 9 கோவில்களுக்கும் சென்று வருகிறது. இதற்கு கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்பட்டது.

இதேபோல் நெல்லையில் இருந்து திருவேங்கடநாதபுரம், கருங்குளம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், வள்ளியூரில் இருந்து களக்காடு வழியாக திருக்குறுங்குடிக்கும், வீரவநல்லூரில் இருந்து அத்தாளநல்லூருக்கும் இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Tags:    

Similar News