காங்கேய சித்தர் மடத்தில் பவுர்ணமி யாகம்
- ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவு காலமாகும்.
- யாகத்தினால் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கும் என்பது சிறப்பு.
நாகப்பட்டினம்:
நாகூர் காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் புரட்டாசி மாத பவுர்ணமி யாகம் நடந்தது.
இந்த நாளில் விரதம் இருந்து சிவ பெருமான் வழிபாடு மற்றும் சித்தர் பீடங்களில் யாகம் செய்வதால் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் கூட நீங்கும் என்பது சிறப்பு.
அதோடு செல்வ வளம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவு காலமாகும்.
நாகூரில் எழுந்தருளி யுள்ள காங்கேய சித்தர் ஜீவபீடத்தில் புரட்டாசி மாத பவுர்ணமி யாக பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்த யாக பூஜையினை வழக்கறிஞர் முத்துகுமரசாமி மற்றும் அவரது சகோதரி நீலாயதாட்சி ஆகியோர் செய்தனர்.
இந்த யாகத்தை கும்பகோணத்தைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் மற்றும் காங்கேயர் மடத்தின் பூஜகர் வெங்கட்ராமன் ஆகியோர் செய்தனர்
இந்த புரட்டாசி மாத யாகத்தை காங்கேய சித்தர் ஜீவ பீடத்தை நிர்வகித்து வரும் காங்கேய சித்தர் அறக்கட்டளை சேர்ந்த ராஜசரவணன், கோகுல கிருஷ்ணன், குமார் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.