தஞ்சை காதி கிராப்டில் கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை
- காந்தியடிகள் உருவப் படத்திற்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
- ரூ.90 லட்சம் விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு கதர்கிராமத் தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தஞ்சை தலைமைதபால் நிலையம் எதிரில் உள்ள ராணுவத்தினர் மாளிகை காதிகிராப்ட்டில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை தொடக்க விழா கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.
இதையடுத்து காந்தியடிகள் உருவப் படத்திற்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செய்து
கதர் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் உதவி இயக்குநர், பிரான்சிளப் தெரசாமேரி, கதர் அங்காடி மேலாளர் சாவித்திரி மற்றும் அரசு அலுவலர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நடப்பாண்டு இம்மாவட்டத்திற்கு ரூ.90 லட்சம் விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்ப ட்டுள்ளது. குறியீட்டினை அடைவதற்கு எங்கள் கதர் துறையால் தயார் செய்யப்படும் அசல் வெள்ளி சரிகை பட்டு ரகங்கள், கதர் ரகங்கள், பாலியஸ்டர் ரகங்கள், உல்லன் ரகங்கள் ஆகியவைகள் வாடிக்கை யாளர்களைக் கவரும் வண்ணம் புத்தம் புதிய வடிவமைப்பில் உள்ளது.
மேலும் முழுவதும் சுத்தமான இலவம் பஞ்சினால் மிக நேர்த்தியாக தயார் செய்யப்பட்ட மெத்தை மற்றும் தலையணைகள் மெத்தை விரிப்புகள், கதர் அங்காடியில் இருப்பில் உள்ளது.
கதர் பருத்தி, பட்டு, பாலியஸ்டர் ஆகியவற்றிருக்கு 30 சதவீதம் தள்ளுபடியும், உல்லனுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.