உள்ளூர் செய்திகள்

காவிரி உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

பூதலூரில் 26-ந் தேதி ரெயில் மறியல் போராட்டம்

Published On 2023-09-17 10:21 GMT   |   Update On 2023-09-17 10:21 GMT
  • கா்நாடக அரசு திறந்துவிட மறுத்து, பெயரளவுக்கு சிறிதளவு தண்ணீரை மட்டும் திறந்துவிட்டது.
  • தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களின் பாசன நீா், 22 மாவட்டங்களின் குடிநீா் பறிபோய்க் கொண்டிருக்கிறது.

தஞ்சாவூர்:

தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து குழு ஒருங்கிணைப்பாளா் மணியரசன் கூறியதாவது:-

நிகழாண்டு கா்நாடக அணைகள் 90 சதவீதம் நீா் நிரம்பிய நிலையிலும், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு திறந்துவிட வேண்டிய முறையே 9.19 டி.எம்.சி., 31.24 டி.எம்.சி., 45.95 டி.எம்.சி. தண்ணீரைக் கா்நாடக அரசு திறந்துவிட மறுத்து, பெயரளவுக்கு சிறிதளவு தண்ணீரை மட்டும் திறந்துவிட்டது.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மிகக் குறைவாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் திறந்துவிட ஆணையிடப்பட்டது. ஆனால், அதைத் திறந்துவிட கா்நாடகம் மறுத்து, சில நாள்களுக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் மட்டும் திறந்துவிட்டு, அதையும் நிறுத்திவிட்டது.

கடந்த 12 ஆம் தேதி காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடுமாறு கா்நாடகத்துக்கு ஆணையி ட்டது. அதை கா்நாடகம் முற்றிலும் மறுத்து அணைகளை மூடிவிட்டது.

இதனால், தமிழ்நாட்டில் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை பயிா் அழிகிறது. ஒரு போக சம்பா 12 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா். தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களின் பாசன நீா், 22 மாவட்டங்களின் குடிநீா் பறிபோய்க் கொண்டிருக்கிறது.

எனவே, கா்நாடக அரசின் சட்ட விரோத மற்றும் இனவெறிச் செயலைக் கண்டித்தும், நடுநிலை தவறி, கா்நாடக அரசின் சட்ட விரோதச் செயல்களுக்குத் துணை போகும் மத்திய அரசைக் கண்டித்தும், சுப்ரீம் கோர்ட் தீா்ப்பின்படி காவிரி நீரைத் தமிழ்நாட்டுக்குப் பெற்றுத் தர வலியுறுத்தியும் காவிரி உரிமை மீட்புக் குழு, விவசாயிகள் சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் இணைந்து தஞ்சாவூா் மாவட்டம், பூதலூரில் வருகிற 26ஆம் தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது .

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் குழு பொருளாளா் மணிமொழியன், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலா் வெங்கட்ராமன், ஐ.ஜே.கே. மேற்கு மாவட்டச் செயலா் சிமியோன் சேவியர்ராஜ், வெள்ளாம்பெரம்பூா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News