உள்ளூர் செய்திகள்
- ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது.
- விநாயகர், முருகன் ஆகிய பரிவார தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள 13ம் நூற்றாண்டை சேர்ந்த நம்பு ஈஸ்வரர் கோவிலில் விநாயகர், முருகன் ஆகிய பரிவார தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்றது. இதில் 1008 சங்குகளால் சங்காபிஷேகமும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. சிவாச்சாரியார்களால் யாகம் வளர்க்கப்பட்டு, மந்திரங்கள் ஓதப்பட்டு சிவன், விநாயகர், முருகன், நந்தி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மண்டல பூஜை நடைபெற்றது.
ஏற்பாடுகளை வாசு, கருப்பசாமி ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.