அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டினால் நடவடிக்கை
- கீழக்கரையில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
- நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கீழக்கரை
கீழக்கரை நகராட்சி கமிஷனர் செல்வராஜ் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிகுட்பட்ட கடற்கரையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலை வில் அனுமதி இல்லாமல் அடுக்குமாடி குடியிருப்பு வணிக வளாகம் கட்டுவதற்கு அனுமதி கிடையாது.
இந்த நிலையில் கீழக்கரை கடற்கரையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் அடுக்குமாடி கட்டிடம், வாடகை குடியிருப்பு கட்டு வதாக நகராட்சி நிர்வாகத் திற்கு புகார் வந்தது. இதை யடுத்து நகராட்சி கமிஷனர் செல்வராஜ், கீழக்கரையில் உள்ள அனைத்து கட்டி டங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
அதன்பேரில் கீழக்கரை நகர் அமைப்பு ஆய்வாளர் வனிதா, அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள், வணிக வளாகங்கள், வாடகை குடியிருப்பு, அடுக்குமாடி கட்டிடங்களை பார்வையிட்டார். அப்போது சாலை தெருவில் கடற்கரை யில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் அதிக உயரமான வாடகை குடி யிருப்பு கட்டிடங்கள் கட்டி யது தெரியவந்தது.
மீண்டும் இந்த கட்டி டத்தின் வரை படங்கள் குறித்து ஆய்வு செய்ய கோரி மாவட்ட நகர் ஊர் அமைப்பு துணை இயக்குனர் அலுவ லகத்திற்கு நகராட்சி மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் நகராட்சி கமிஷனர் கூறியதாவது:-
கீழக்கரை பகுதியில் புதிய கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள், வாடகை குடியிருப்புகள் முறையாக அனுமதி பெற்று கட்ட வேண்டும். மேலும் வாசல் படிகளை உரிமை யாளர்கள் இடத்திற்குள் அமைத்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் கட்டிடங்கள் அகற்றப்படுவதுடன், உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.