- ஏர்வாடி தர்கா கொடி ரத ஊர்வலம் நடந்தது.
- இரு தரப்பினரிடமும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கீழக்கரை
ஏர்வாடி சுல்தான் இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்காவில் சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் ெதாடங்கியுள்ளது.
கொடி ரத ஊர்வலத்தில் பாரம்பரிய உரிமை கோரி இரு தரப்பினரிடையே பிரச்சினை எழுந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் ஒரு தரப்பினர் இது தொடர்பாக முறையிட்டனர்.
அதனைத்தொடர்ந்து சமாதான கூட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் நடந்தது. ராமநாயதபுரம் கோட்டாட்சியர் கோபு தலைமை வகித்தார். தாசில்தார் பழனிக்குமார் முன்னிலை வகித்தார்.
டி.எஸ்.பி., சுதிர்வேல், துணை தாசில்தார் பரமசிவம், வருவாய் அலுவலர் வேல்முருகன், வி.ஏ.ஓ., மாரியப்பன், தர்கா நிர்வாக சபை தலைவர் பாக்கீர் சுல்தான் லெவ்வை, துணைத்தலைவர் சாதிக் பாட்ஷா, உறுப்பினர்கள் துல்கருணை பாட்ஷா, அப்துல் கனி, அஜ்முல் ரகுமான் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஏர்வாடி முஜாபிர் நல்ல இப்ராகிம் மஹாலில் இருந்து தண்ணீர் பந்தல் வரை ஒரு தரப்பினரும், அங்கிருந்து தர்கா வரை மற்றொரு தரப்பினரும் கொடி ரதம் ஊர்வலத்தை நிறைவு செய்வது எனவும், சந்தனக்கூடு ஊர்வலத்தில் இதே நடைமுறையை பின்பற்றுவது என முடிவு செய்யப்பட்டது.