- திருப்புல்லாணி டாஸ்மாக் கடை 2 மாதத்துக்குள் அகற்றப்படும் என சமாதான கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
- 2 மாத காலத்திற்குள் கடையை அகற்றவில்லையெனில் நாங்கள் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கூறி பல்வேறு அரசியல் கட்சி மற்றும் சமூக நல அமைப்பு சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்
இந்த நிலையில் டாஸ்மாக் கடை முன்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதையடுத்து கீழக்கரை தாசில்தார் சரவணன் ஏற்பாட்டில் சமாதான கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் திருப்பு ல்லாணி கோவில் அருகே டாஸ்மாக் கடை இருப்பதால் ஏற்படும் சிரமங்கள் குறித்து எஸ்.டி. பி.ஐ. கட்சி நிர்வாகிகள் விளக்கினர். இறைத்தொடர்ந்து 2மாத காலத்திற்குள் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள் வதாக டாஸ்மாக் தாசில் தார் சேதுராமன் உறுதி அளித்தார். இது குறித்து எழுத்துப் பூர்வமாக எழுதி கையெழுத்திட்டு வழங்கினர்.
இதில் கீழக்கரை துணை தாசில்தார் பழனிக்குமார், கோட்ட ஆய அலுவலர் கல்யாண குமார் கீழக்கரை இன்ஸ்பெக்டர் பால முரளி சுந்தரம், சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் ராஜா, வருவாய் ஆய்வாளர் சரவணகுமார் உள்பட வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சி தொகுதி தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் பெரியபட்டினம் தலைவர் முகமது மீராசா, பொரு ளாளர் சையது இப்ராம்ஷா, கீழக்கரை நிர்வாகிகள் சுல்தான் சிக்கந்தர், சாதிக் அலி ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். 2 மாத காலத்திற்குள் கடையை அகற்றவில்லையெனில் நாங்கள் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.