தமிழ்நாடு சிமெண்டு விற்பனை ஏஜெண்டுக்கு விண்ணப்பிக்கலாம்
- ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு சிமெண்டு விற்பனை ஏஜெண்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
- மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர்அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபும் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு சிமெண்டு விற்பனை முகவர் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தில் 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராகவும் மற்றும் இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டிட தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராக வயது வரம்பு 18 முதல் 65 -க்குள் இருக்க வேண்டும். திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் மானியம் அளிக்கப்படும். இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர்அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.