817 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா
- 817 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா நடந்தது,
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அலாவுதீன், துணைமுதல்வர் சேக்தாவூது ஆகியோர் செய்திருந்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 817 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி முதல்வர் அலாவுதீன் தலைமையில் நடந்தது.
இதில் துணைமுதல்வர் மற்றும் வேலை வாய்ப்பு முதன்மை ஓருங்கிணைப்பாளருமான சேக்தாவுது பேசியதாவது:-
கடந்த 15 ஆண்டுகளில் 15 ஆயிரம் மாணவர்கள் வளாக நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளனர். இந்த ஆண்டு ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாமில் இதுவரை தேர்வு செய்யப்பட்ட 817 மாணவர்கள் பல்வேறு பன்னாட்டு நிறுவனமான ஓசூர் அசோக் லேலாண்ட், லுகாஸ் டி.வி.எஸ்., கேட்டர்பில்லர் இந்தியா ஓசூர் டி.வி.எஸ்.சுந்தரம் ஆட்டோ காம்போனன்ஸ், ஹெச்.சி.எல் டெக்னாலஜி, விப்ரோ சிஸ்டம்ஸ் மற்றும் டி.வி.எஸ்.ட்ரைனிங் மற்றும் சர்வீசஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் மூலமாக பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எந்திரவியல்துறை, மின்னியியல், மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறை, கனிணித்துறை மற்றும் கப்பல்துறைகளில் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்றார்.
எந்திரவியல் துறைத்தலைவர் கணேஷ்குமார் வரவேற்றார். நிர்வாக இயக்குநர் ஹமீது இப்ராகிம் சிறப்புரையாற்றி வேலைவாய்ப்பு முகாமில் வளாக நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 817 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
விழாவில் பாலிடெக்னிக் கல்லூரியின் துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள்,பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மின்னணுவியல் முதுநிலை விரிவுரையாளார் மரியதாஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அலாவுதீன், துணைமுதல்வர் சேக்தாவூது ஆகியோர் செய்திருந்தனர்.