உள்ளூர் செய்திகள்

தேவர் குருபூஜை விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்

Published On 2022-10-27 07:59 GMT   |   Update On 2022-10-27 07:59 GMT
  • கடலாடியில் தேவர் குருபூஜை விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
  • விழா கமிட்டியாளர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

சாயல்குடி

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 115-வது ஆண்டு ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா மற்றும் 34-ம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா, ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய 5-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது.

இதையொட்டி ஆப்பநாடு மாட்டுவண்டி பந்தய குழுவினர் சார்பில் பெரிய மாடு, நடு மாடு, சின்ன மாடு பந்தயம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். கடலாடி நகர் தேவர் உறவின் முறை தலைவர் முனியசாமி முன்னிலை வகித்தார்.

ஆப்பநாடு மாட்டு வண்டி பந்தய குழு தலைவர் முனியசாமி பாண்டியன் ஒருங்கிணைத்தார். பெரிய மாடு பந்தயத்தை முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார். நடுமாடு பந்தயத்தை ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் முனியசாமி தொடங்கி வைத்தார்.

சின்ன மாடு பந்தயத்தை முன்னாள் ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் கீழத்தூவல் ராமசாமி தொடங்கி வைத்தார். பெரியமாடு மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசு மதுரை மோகனசாமி குமாரின் மாடும், 2-வது பரிசை தூத்துக்குடி மாவட்டம் சண்முகபுரம் விஜயகுமாரின் மாடும், நடுமாடு பந்தயத்தில் மதுரை அவனியாபுரம் மோகன சாமி குமார் மாடு முதல் பரிசையும், 2-வது பரிசை தூத்துக்குடி மாவட்டம் சண்முகபுரம் விஜயகுமார் மாடும், 3-வது பரிசை மதுரை ஜெய்ஹிந்துபுரம் அக்னி முருகன் மாடும், 4-வது பரிசை தஞ்சாவூர் காளிமுத்து மாடும் பெற்றன.

சின்ன மாடு பந்தயத்தில் சித்திரங்குடி ராமமூர்த்தி மாடும், 2-வது பரிசை தஞ்சாவூர் காளிமுத்து மாடும், 3-மூன்றாவது பரிசை பேரையூர் இலந்தைகுளம் முனியசாமி மாடும் பெற்றன. விழா கமிட்டியாளர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆப்பநாடு மாட்டு வண்டி பந்தய நிர்வாகிகள் செய்தி ருந்தனர்.

Tags:    

Similar News