மீன் வியாபாரிகளுக்கு மானியத்தில் ஐஸ் பெட்டிகள்
- ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் வியாபாரிகளுக்கு மானியத்தில் ஐஸ் பெட்டிகள் வழங்கப்பட உள்ளன.
- மீனவா்களுக்கான ஐஸ் பெட்டிகள் ராம நாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் வை க்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1500-க்கும் அதிகமான விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் மூலம் பாரம்பரிய முறையில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மீனவர்களுக்கு மத்திய-மாநில அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது மானியத்தில் ஐஸ் பெட்டிகள் மற்றும் இருசக்கர வாகனம் வழங்கு வதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது.
இதுதொடர்பாக ராமநாத புரம் மீன்வளத்துறை துணை இயக்குநா் காத்தவராயன் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் பிடித் தொழில் சாா்ந்த மத்திய அரசின் திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பிரதமா் மீன்வள திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் 30 ஏழை மீன் வியாபாரிகளுக்கு இருசக்கர வாகனங்கள், மீன்களை பதப்படுத்தி விற்கும் வகையில் உதவும் ஐஸ் பெட்டிகள் வழங்கப்பட உள்ளன.
மீனவா்களுக்கான ஐஸ் பெட்டிகள் ராம நாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் வை க்கப்பட்டுள்ளன. மொத்த விலையில் 40 சதவீதம் மானியத்தில் ஐஸ் பெட்டி கள் உள்ளிட்டவை மீன வா்களுக்கு வழங்கப்பட உள்ளது.
தற்போது முதல் கட்ட மாக ஐஸ் பெட்டிகள் வந்துள்ளன. ஆகவே இரு சக்கர வாகனங்கள் வந்த பிறகு தகுதியுள்ள பயனாளிகளுக்கு விரைவில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.