உள்ளூர் செய்திகள்

தீவனப் பயிர் சாகுபடி திட்டங்களில் பயன்பெற கால்நடை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

Published On 2023-06-22 08:17 GMT   |   Update On 2023-06-22 08:17 GMT
  • தீவனப் பயிர் சாகுபடி திட்டங்களில் பயன்பெற கால்நடை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
  • சங்க உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பசுந்தீவன பற்றாக்கு றையை நிவர்த்தி செய்யும் வகையிலும், வறட்சி காலங்களில் கால்நடை களுக்கு தீவனம் வழங்கும் பொருட்டும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனம் உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் (2023-24) அரசு மானியத்துடன் கூடிய கீழக்கண்ட தீவனப் பயிர் சாகுபடி திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.

வேளாண்மைத்துறை இணை இயக்குநருடன் கலந்தாலோசித்து தோட்டம், பழத் தோட்டங்களில் ஊடு பயிராக பசுந்தீவனங்கள் சாகுபடி செய்வதற்கு 20 ஏக்கர் குறியீடு பெறப்பட்டுள்ளது.

கால்நடை வளர்ப்பவராக இருந்து, குறைந்த பட்சம் 0.25 ஏக்கர், அதிக பட்சம் 1 ஏக்கர் பரப்பில் பாசன வசதியுடன் கூடிய நிலம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும், இதற்கு முன் இச்சலுகையை பெற்றவராக இருத்தல் கூடாது.

பசுந்தீவனங்கள் வீணாவதை குறைப்பதற்காக புல்வெட்டும் கருவிகள் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற 2 கால்நடைகள் வைத்திருக்க வேண்டும். இதற்கு முன் 10 வருடங்களில் இந்த சலுகையை பெறாத வராகவும் புல் வெட்டும் கருவி 50 சதவீத தொகையை ஏற்பவராகவும் இருக்க வேண்டும்.

எல்லா இனங்களிலும் 30சதவீதம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்த வர்கள் தேர்ந்தெடுக்கப் படுவர். மேலும் குறுவிவ சாயிகள் மற்றும் ஆவின் கூட்டுறவு சங்க உறுப்பி னர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெற விருப்பமுள்ள திட்டங்களை குறிப்பிட்டு எழுத்து மூலமாக விண்ணப்பம் அளிக்கலாம்.

மேலும் தங்கள் கால்நடை களுக்குத் தேவையான தீவன விதைகளை இத்திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News