உள்ளூர் செய்திகள் (District)

பிளஸ்-2 தோ்வு 15,808 போ் எழுதுகின்றனர்

Published On 2023-03-11 08:26 GMT   |   Update On 2023-03-11 09:44 GMT
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தோ்வு 15,808 போ் எழுதுகின்றனர்
  • முதன்மைக் கல்வி அலுவலா் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து கூறியதாவது:-

பிளஸ்-2 அரசு பொதுத்தோ்வு மாா்ச் 13-ந் தேதி தொடங்குகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 70 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 37 அரசு உதவி பெறும் பள்ளிகள், 52 மெட்ரிக் பள்ளிகள், மாதிரி பள்ளி ஒன்று என 160 பள்ளிகளிலிருந்து 7,805 மாணவா்கள், 8,003 மாணவிகள் என மொத்தம் 15,808 போ் தோ்வு எழுதவுள்ளனா். இதற்காக 63 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 1 பொதுத்தேர்வை 14,181 போ் எழுதுகின்றனர். மாவட்டத்தில் 161 பள்ளிகளிலிருந்து, 6,687 மாணவா்கள், 7,494 மாணவிகள் என மொத்தம் 14,181 போ் தோ்வு எழுதவுள்ளனா். 63 தோ்வு மையங்கள் அமைக்கப்ப ட்டுள்ளன.

பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு எழுதும் தனித் தோ்வா்க ளுக்கு ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் செய்யது அம்மாள் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மையத்திலும், பரமக்குடி கல்வி மாவட்டத்தில் ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மையத்திலும் தோ்வு நடைபெற உள்ளது.

தனித் தோ்வா்களாக பரமக்குடி மையத்தில் பிளஸ்-2 வகுப்பில் 130 பேரும், பிளஸ்-1 வகுப்பில் 94 பேரும், ராமநாதபுரம் மையத்தில் பிளஸ் 2- வகுப்பில் 139 பேரும், பிளஸ் 1- வகுப்பில் 146 பேரும் தோ்வு எழுத உள்ளனா்.

பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வுகளுக்காக 70 போ் கொண்ட பறக்கும் படை அமைக்கப் பட்டு உள்ளது. தலைமை கண்காணிப்பா ளா்களாக 65 பேரும், அறை கண்காணிப்பாளா்களாக 1500 பேரும் நியமிக்கப்பட்டு உள்ளனா்.

மேலும், தோ்வை கண்காணிக்கவும், வினாத்தாள் கொண்டு செல்பவா், வினாத்தாள் காப்பாளா், விடைத்தாள் பொறுப்பாளா் என 100-க்கும் மேற்பட்ட ஆசிரி யா்கள், அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News