உள்ளூர் செய்திகள்

தொண்டி புதிய பஸ் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட கோரிக்கை

Published On 2023-04-28 07:44 GMT   |   Update On 2023-04-28 07:44 GMT
  • தொண்டி புதிய பஸ் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட கோரிக்கை வைத்து வருகின்றனர்.
  • மணிமுத்தாறு பாலம் இருபுறமும் அலங்கார விளக்கு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி முதல் நிலை பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவி ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். தொண்டி புதிய பஸ் நிலையத்திற்கு டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பஸ் நிலையம் என பெயர் சூட்ட வேண்டும். பஸ் நிலையத்தின் இருபுறமும் நுழைவு வாயிலை பொது நிதியில் இருந்து கட்ட வேண்டும், பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர், செயல் அலுவலர், கணிணி அறைகளை மராமத்து செய்ய வேண்டும், கிழக்கு கடற்கரை சாலையில் மாலை நேர போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கனரக வாகனங்களை பழைய பஸ் நிலையம், கைக்குளவர் ஊரணி அருகில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்.

சரக்கு வாகனங்களை காலை 11 மணி முதல் 3 மணி வரை இயக்க வேண்டும். மணிமுத்தாறு பாலம் இருபுறமும் அலங்கார விளக்கு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News