உள்ளூர் செய்திகள்

மத்திய மந்திரி வி.கே.சிங்கை, பா.ஜ.க. மாவட்ட தலைவர் கதிரவன் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அருகில் ஐகோர்ட்டு நீதிபதி சண்முகநாதன் உள்ளார்.

பரமக்குடி-ராமேசுவரம் 4 வழிச்சாலை பணியை துரிதப்படுத்த கோரிக்கை

Published On 2022-11-22 08:37 GMT   |   Update On 2022-11-22 08:37 GMT
  • பரமக்குடி-ராமேசுவரம் நான்கு வழிச்சாலை பணியை துரிதப்படுத்த வேண்டும் என மத்திய மந்திரியிடம் பா.ஜ.க. தலைவர் கதிரவன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • உடனடியாக இதற்கான பணிகளை தொடங்கி நிறைவேற்ற வேண்டுமென கூறினர்.

பனைக்குளம்

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. தலைவர் இ.எம்.டி. கதிரவன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை இணை மந்திரி வி.கே.சிங்கை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மதுரை முதல் பரமக்குடி வரை 4 வழி சாலை பணிகள் முடிந்தன. பிரதமர் மோடி ஆட்சியில் இந்த பணிகள் தொடங்கப்பட்டது. இந்த சாலை பணிகள் முடிவுற்று சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி மதுரை-பரமக்குடி 4 வழி சாலையை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக பரமக்குடி முதல் ராமேசுவரம் வரை 4 வழி சாலையாக மாற்றி தர வேண்டும். இந்தத் திட்டம் இதுவரை நிறைவே ற்றப்படாமல் உள்ளதால் உடனடியாக இதற்கான பணிகளை தொடங்கி நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அப்போது மாவட்ட தலைவருடன் ஐகோர்ட்டு வக்கீல் எஸ்.சண்முகநாதன், பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர் அழகர் உள்பட நிர்வாகிகள் இருந்தனர்.

Tags:    

Similar News